Press "Enter" to skip to content

வழக்கமான தொடர் வண்டி சேவை தொடங்குவது எப்போது?:தொடர்வண்டித் துறை அதிகாரி விளக்கம்

கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான தொடர் வண்டி சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது.

புதுடெல்லி :

இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் கடைசியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் தொடர் வண்டி சேவையும் முடங்கியது. பின்னர் மே மாதம் முதல் படிப்படியாக தொடர் வண்டி சேவை தொடங்கப்பட்டது. சிறப்பு தொடர் வண்டிகளாக பல தொடர் வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்படி சிறப்பு தொடர் வண்டிகளாக இயக்கப்பட்டாலும் தற்போதைய நிலையில் வெறும் 66 சதவீத தொடர் வண்டிகளே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 77 சதவீத மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ்கள், 91 சதவீத புறநகர் தொடர் வண்டிகள், 20 சதவீத பயணிகள் தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் கொரோனாவுக்கு முன்பு இருந்த வழக்கமான தொடர் வண்டி சேவை எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால் இந்த சேவை அடுத்த 2 மாதங்களில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்துதொடர்வண்டித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அடுத்த 2 மாதங்களில், சிறப்பு தொடர் வண்டிகளுடன் கொரோனாவுக்கு முந்தைய சேவைகள் தொடங்கும். எனினும் இது மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் கொரோனா பரவல் நிலையை பொறுத்தது’ என்று தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »