Press "Enter" to skip to content

எவ்வளவு காலம் மக்கள் மத்திய அரசின் கொடுமையைத் தாங்குவது?: ராகுல் காந்தி கேள்வி

நேர்மறை சிந்தனை என்ற பொய்யான ஆறுதல் அளிப்பது, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த சுகாதாரப் பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தினரையும், ஆக்சிஜன், ஆஸ்பத்திரி, மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்வோரையும் கேளிக்கை செய்வதாகும்.

ராகுல் காந்தி

புதுடெல்லி :

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சோகமான செய்திகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கின்றன. கொரோனா நெருக்கடியால் உருவான அடிப்படைப் பிரச்சினைகளே இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த பெருந்தொற்றில் எவ்வளவு காலம் மத்திய அரசின் கொடுமையை சக குடிமக்கள் தாங்குவது? இதற்கு பொறுப்பானவர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘நேர்மறை சிந்தனை என்ற பொய்யான ஆறுதல் அளிப்பது, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த சுகாதாரப் பணியாளர்கள், அவர்கள் குடும்பத்தினரையும், ஆக்சிஜன், ஆஸ்பத்திரி, மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்வோரையும் கேளிக்கை செய்வதாகும். ஒருவர் தனது தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வது என்பது நேர்மறை செயல்பாடு அல்ல, சக குடிமக்களை ஏமாற்றும் வேலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »