Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மருத்துவ நிபுணர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி மருத்துவ நிபுணர்களுடன் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்தவகையில், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு, காஷ்மீர் உள்பட பல்வேறு பிராந்தியங்களை சேர்ந்த மருத்துவர்களுடன் அவர் உரையாடினார். கொரோனா சிகிச்சை அனுபவங்களை பிரதமரிடம் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தங்களது யோசனைகளையும் தெரிவித்தனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »