Press "Enter" to skip to content

பிரான்சை துரத்தும் கொரோனா : புதிதாக 19,050 பேருக்கு கொரோனா பாதிப்பு – 141 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

பாரிஸ்:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
 
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்து 17 ஆயிரத்து 397 ஆக உள்ளது.
 
ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 181 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,88,782 பேர் குணமடைந்துள்ளனர், தற்போது 6,20,434 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள உணவகங்கள்,மதுபானக்கடைகள், கடைகள், திரைப்படம் திரையரங்கம்கள், அருங்காட்சியகங்கள், கலச்சாரம் மற்றும் விளையாட்டு மையங்கள் திறக்கலாம் என்றும், நாடு தழுவிய இரவு ஊரடங்கு உத்தரவு மாலை 7 மணிக்கு பதிலாக 9 மணி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »