Press "Enter" to skip to content

உலக பாரம்பரிய நினைவு சின்னமாகிறது காஞ்சீபுரம் கோவில்கள் – யுனெஸ்கோ தற்காலிக பட்டியலில் தகவல்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு நாடு முழுவதும் இருந்து 48 முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

புதுடெல்லி:

யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் இடம்பெறுவதற்கு நாடு முழுவதும் இருந்து 48 முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றில் கீழ்க்கண்ட 6 தேர்வு செய்யப்பட்டு, யுனெஸ்கோ இணையதளத்தில் உள்ள தற்காலிக பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அதில் காஞ்சீபுரம் கோவில்கள், மராத்தா பட்டாளம் கட்டிடக்கலை, சத்புரா புலிகள் காப்பகம், கங்கைக்கரை ஒட்டியுள்ள வாரணாசி நகர், கர்நாடகத்தில் உள்ள ஹிரே பெனக்கல் – பெருங்கற்கால பாறைகள், நர்மதா பள்ளத்தாக்கில் உள்ள பேடாகாட், லம்ஹேடாகா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »