Press "Enter" to skip to content

இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – ஹர்சவர்தன் உறுதி

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை நாளொன்றுக்கு 25 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்தார்.

புதுடெல்லி:

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சுகாதார மந்திரிகள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் நேற்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, ‘ஜூலை மாத இறுதிக்குள் இந்தியா 51 கோடி தடுப்பூசி டோஸ்கள் கொள்முதல் செய்யும். ஆகஸ்டு முதல் டிசம்பர் இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் வாங்கப்படும். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் 267 கோடி டோஸ்கள் மூலம் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் அனைத்து பெரியவர்களுக்குமாவது (18 வயதுக்கு மேற்பட்டோர்) தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை நாளொன்றுக்கு 25 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்த ஹர்சவர்தன், அந்தவகையில் நேற்று (நேற்று முன்தினம்) முதல் முறையாக 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் பரிசோதனை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி திட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், இந்தியா 18 கோடி மைல்கல் எட்டியிருப்பதையும் பெருமிதத்துடன் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »