Press "Enter" to skip to content

கவுதமாலா சிறையில் கலவரம் – 4 பேர் தலை துண்டிப்பு

கவுதமாலா சிட்டியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், குவெட்சால்டெனங்கோ நகரில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

கவுதமாலா சிட்டி:

மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா சிட்டியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், குவெட்சால்டெனங்கோ நகரில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் கைதானவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இரு போட்டி குழுக்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பரஸ்பரம் தாக்கி உள்ளனர்.இதில் 4 கைதிகள் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இந்த கலவரத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கவுதமாலா நாட்டில் ஆண்டுதோறும் நிகழ்கிற சுமார் 3,500 வன்முறை மரணங்களில் கிட்டத்தட்ட சரிபாதி, கும்பல்களால் நடத்தப்படுபவை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »