Press "Enter" to skip to content

யோகா குரு ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

புதுடெல்லி:

பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோகா குரு என்றும் சிலர் கூறுகின்றனர். பதஞ்சலி நிறுவனம் மூலம் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ராம்தேவ் கூறுகிறார். இவர் கொரோனா வைரசை தடுக்கும் என்று எவ்வித உத்தரவாதமும் அளிக்கப்படாத கொரோனாநில் என்ற மருந்து பொருளை விற்பனை செய்து வருகிறார்.

இதற்கிடையில், பதஞ்சலி நிறுவனத்தின் ராம்தேவ் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அலோபதி சிகிச்சை முறையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது சிகிச்சை அளிக்கப்படாதது அல்லது ஆக்சிஜன் கிடைக்காததால் உயிரிழந்தவர்களை விட அதிகம். அலோபதி முட்டாள்தனமான மற்றும் தோல்வியடைந்த சிகிச்சை முறை’ என்று கூறினார்.

மேலும், முட்டாள்தனமான அறிவியல் மற்றும் மருந்துகள் குறிப்பாக ரெம்டெசிவிர், ஃபவிப்ளூ மற்றும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பால் அனுமதிக்கப்பட்ட பிற மருந்துகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தோல்வியடைந்து விட்டன என்றார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ராம்தேவ் மீது பொருந்தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ‘அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது’ என்று கூறிய ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்பியுள்ளது. ராம்தேவ் தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »