Press "Enter" to skip to content

காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை- அரசு எச்சரிக்கை

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம். இதை தவிர்த்து பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடை வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.  காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.  

இக்கட்டான சூழலை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த நிலையில், காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. 

மேலும் காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல். உயர்த்தப்பட்ட காய்கறி விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும். இல்லையெனில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அரசு, காய்கறிகள் அதிக விலைக்கு விற்பது தொடர்பாக ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »