Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ‘குளு, குளு’ கருவி – மும்பை மாணவர் கண்டுபிடிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முழு உடல் கவசத்தை பயன்படுத்துவதால், கடுமையான வெப்பம், வியர்வையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

மும்பை:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முழு உடல் கவசத்தை பயன்படுத்துவதால், கடுமையான வெப்பம், வியர்வையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கோவ்-டெக் என்ற காற்றை உள்செலுத்தும் கருவியை மும்பையை சேர்ந்த மாணவர் நிஹால் சிங் ஆதர்ஷ் கண்டுபிடித்துள்ளார். 2-ம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவரான அவர், “முழு உடல் கவசம் அணியும் போதும், மின் விசிறியின் கீழ் அமரும் உணர்ச்சியை கோவ்-டெக் கருவி வழங்கும்.

சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, அதை வடிகட்டி, தூய்மையான காற்றை முழு உடல் கவசத்தின் உள்ளே இந்த கருவி செலுத்தும்” என்று கூறுகிறார். தனது தாய் மருத்துவர் பூனம் கவுர் ஆதர்ஷ், முழு உடல் கவசத்தை அணிந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து, இதர மருத்துவ பணியாளர்களுக்கு உதவும் நோக்கத்தோடு இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டார்.

ரூ.5,499 விலையில் விற்பனை செய்யப்படும் இந்தக் கருவி, புனேவில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30-40 கருவிகள் சோதனை முயற்சியில் ஆஸ்பத்திரிகளுக்கும், அரசுசாரா அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »