Press "Enter" to skip to content

ஒப்புதல் கோரி அயோத்தி மசூதிக்கான கட்டுமான திட்ட வரைபடம் தாக்கல்

சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தானிபூர் கிராமத்தில் உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தது.

அயோத்தி:

சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தானிபூர் கிராமத்தில் உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தது.

அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு ஒப்புதல் கோரி, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் மசூதி கட்டுமான திட்ட வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய-இ்ஸ்லாமிய கலாசார அறக்கட்டளை உறுப்பினர் அப்சல் அகமதுகான் அதை அதிகாரிகளிடம் அளித்தார். பரிசீலனை கட்டணமாக ரூ.89 ஆயிரம் செலுத்தினார்.

ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமரும்வகையில் மசூதி கட்டப்படுகிறது. இந்த திட்டத்தில், 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, சமுதாய சமையல் கூடம், ஆராய்ச்சி மையம் ஆகியவையும் கட்டப்படுகின்றன

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »