Press "Enter" to skip to content

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

நாடுமுழுவதும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் 2-வது அலை தாக்கம் இருந்து வருகிறது.

இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஏற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு ஊழியர்களின் மாறக்கூடிய அகவிலைப்படி மாதத்துக்கு ரூ.105-ல் இருந்து 210 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 1½ கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த புதிய அகவிலைப்படி உயர்வானது 2021 ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மத்திய அரசின் திட்டமிடப்பட்ட வேலைகளுக்கானதொடர்வண்டித் துறை சுரங்கம், எண்ணெய் வயல், முக்கிய துறைமுகங்கள் ஆகியவற்றின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசால் நிறுவப்பட்ட கழகங்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதமும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »