Press "Enter" to skip to content

தமிழகத்தில் 6300 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை- அமைச்சர் பன்னீர்செல்வம்

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,400 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாவட்டங்களில் 4,900 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் இன்று 13,096 வாகனங்களில் 6,500 மெட்ரிக்  டன் காய்கறி, பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

* விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சந்தைப்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

* விவசாயிகளிடம் நேரடியாக அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

* சென்னையில் 3 சக்கர வாகனம், தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை வியாபாரம் செய்பவர்கள் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினால் புகாரளிக்கலாம்.

* சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 044 45680200 மற்றும் 94999 32899 எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »