Press "Enter" to skip to content

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுற்றுலா, கலாசாரம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம் கபூர், திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா, நவீன பாசன வேளாண்மை, நீர்நிலை மீட்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரும், நவீன பாசன வேளாண்மை, நீர்நிலை மீட்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குனருமான (முழு கூடுதல் பொறுப்பு) விபு நய்யர், நில நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார்.

திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சிகளின் (பயிற்சி) பொது இயக்குனரானார்.

வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் ஜவுளி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் ஆணையர், தொழில் மற்றும் வர்த்தக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரானார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு நிதி மின் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (டான்ஜெட்கோ) மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.சுவர்ணா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »