Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒன்றிணைய வேண்டும் – தலாய்லாமா அழைப்பு

உலகளாவிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அதை எதிர்த்து நடக்கும் போரில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று தலாய்லாமா அழைப்பு விடுத்துள்ளார்.

தர்மசாலா:

புத்த பூர்ணிமாவையொட்டி திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா, மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் “புத்தரின் போதனைகளை எனது சிறு வயதில் இருந்தே கற்க தொடங்கினேன். தற்போது 86 வயதிலும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன். புத்தரின் காலத்திலிருந்து நமது உலகம் கணிசமாக மாறியிருந்தாலும், அவருடைய போதனையின் சாராம்சம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் பொருத்தமாக உள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவர், உலகமெங்கும் மிகப்பெரிய வேதனையையும், நெருக்கடியையும் கொண்டுவந்திருக்கும் கொரோனா தொற்று உள்பட நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய அச்சுறுத்தல்களை சமாளிக்க அதை எதிர்த்து நடக்கும் போரில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »