Press "Enter" to skip to content

அமெரிக்காவில் தீயணைப்பு உலங்கூர்தி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது – 4 பேர் பலி

அமெரிக்காவில் தீயணைப்பு உலங்கூர்தி சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உலங்கூர்தியில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தீயணைப்பு துறைக்கு சொந்தமான தீயணைப்பு உலங்கூர்தி ஒன்று லீஸ்பர்க் நகரில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.இந்த உலங்கூர்தியில் 4 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் உலங்கூர்தி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.‌ இதையடுத்து உடனடியாக மாயமான உலங்கூர்தியை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.இதில் லீஸ்பக் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள சதுப்பு நிலத்தில் உலங்கூர்தி விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

தரையில் மோதிய வேகத்தில் உலங்கூர்தி தீப்பிடித்து எரிந்தது. இதில் உலங்கூர்தி முற்றிலுமாக உருக்குலைந்துபோனது.‌இந்த கோர விபத்தில் உலங்கூர்தியில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உலங்கூர்தி விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன.‌

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »