Press "Enter" to skip to content

அமெரிக்காவில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டவரை காப்பாற்றிய இந்திய தொடர் வண்டி டிரைவர்

அமெரிக்காவில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டவரை காப்பாற்றிய இந்திய தொடர் வண்டி டிரைவரை தொடர் வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும்தொடர்வண்டித் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடர் வண்டி டிரைவராக வேலை பார்த்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டோபின் மடாதில். 27 வயதான இவர் 2 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் டோபின் மடாதில் வழக்கம்போல் நியூயார்க் நகரில் ரெயிலை இயக்கி கொண்டிருந்தார்.

இவரது தொடர் வண்டி அங்குள்ள ஒரு சுரங்க தொடர் வண்டி நிலையத்துக்குள் நுழைந்தபோது நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஒருவரை அருகிலிருந்த மற்றொருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.

இதனால் தொடர் வண்டி நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் தொடர் வண்டி வரும் திசையைப் பார்த்து கைகளை அசைத்து ரெயிலை நிறுத்தும்படி சைகை காட்டினர்.

இதை கவனித்த டோபின் மடாதில் சாதுர்யமாக செயல்பட்டு அவசரகால பிரேக் மூலம் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் தண்டவாளத்தில் விழுந்த நபரிடம் இருந்து 30 அடி தூரத்தில் தொடர் வண்டி நின்றது. இதன் மூலம் அவர் மீது தொடர் வண்டி மோதாமல் அவர் உயிர் தப்பினார்.

எனினும் தண்டவாளத்தில் விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சரியான நேரத்தில் ரெயிலை நிறுத்தி ஒருவரின் உயிரை காப்பாற்றியதற்காக தொடர் வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும்தொடர்வண்டித் துறை அதிகாரிகள், டோபின் மடாதிலை பாராட்டினர். இதனிடையே தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டவர் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது‌ விசாரணையில் தெரியவந்தது. எனவே இது ஒரு இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »