Press "Enter" to skip to content

கொரோனா காலத்தில் ரூபாய் தாள்கள் புழக்கம் அதிகரிப்பு

கொரோனா காலத்தில், பொதுமக்கள் தங்கள் கைகளில் முன்னெச்சரிக்கையாக பணம் வைத்திருந்ததால் ரூபாய் தாள்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

மைய கட்டுப்பாட்டு வங்கி ஆண்டுதோறும் தனது செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதுபோல், 2020-2021 நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2020-2021-ம் நிதியாண்டில் ரூபாய் தாள் புழக்கத்தின் உயர்வு சராசரியான உயர்வை விட அதிகமாக காணப்பட்டது. புழக்கத்தில் இருந்த நோட்டுகளின் மதிப்பு 16.8 சதவீதம் அதிகமாக இருந்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் நோட்டுகளின் புழக்கத்தில் 14.7 சதவீதம்தான் உயர்வு காணப்பட்டது.

கொரோனா காலமாக இருந்ததால், மக்கள் தங்கள் கைகளில் முன்னெச்சரிக்கையாக அதிக பணம் கையில் வைத்திருந்ததே புழக்கம் அதிகரித்ததற்கு காரணம்.

வங்கிகளில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 625 எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. முந்தைய நிதியாண்டில், 2 லட்சத்து 96 ஆயிரம் கள்ள நோட்டுகள் சிக்கின என தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »