Press "Enter" to skip to content

கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகம் தான் கொரோனா தினசரி பாதிப்பில் 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலம் ஆகும்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. மாநிலத்தில் இந்த அலை கடந்த 5-ம் தேதி உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி பதிவானது.

நாட்டிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கர்நாடகம் தான் கொரோனா தினசரி பாதிப்பில் 50 ஆயிரத்தை தாண்டிய மாநிலம் ஆகும். அதன் பிறகு மாநிலத்தில் கொரோனா பரவல் என்பது படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆயினும் மாநிலத்தில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. கொரோனா பாதிப்பு விகிதம் சுமார் 20 சதவீதமாக உள்ளது. இது அதிகம் என்றும், அது 5 சதவீதத்திற்கும் கீழ் வர வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையே, அடுத்த சில மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை வரும் என்றும், அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலையில் கர்நாடகத்தில் மட்டும் 1 முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சம் பேரை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்கு பாதிப்பு லேசாக அல்லது மிதமாக மட்டுமே இருந்ததாகவும், உயிரிழப்பு என்பது மிக குறைவு என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலையிலேயே குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகமாக இருக்கும் நிலையில், மூன்றாவது நிலையில் நிச்சயமாக அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனால் குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »