Press "Enter" to skip to content

கணவரின் கைபேசியை நோண்டிய மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கணவரின் கைபேசியை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கிறது என்று நோண்டி பார்த்த மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துபாய்:

ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கணவரின் கைபேசியை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி நோண்டி பார்த்தார். அப்போது அதில் பல தகவல்கள் இருந்தன. அவற்றை தனது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் அனுப்பி வைத்தார்.

இது சம்பந்தமாக கணவர் தனி மனித உரிமை மீறல் சட்டத்தின் அடிப்படையில் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிபதி அவரது மனைவிக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »