Press "Enter" to skip to content

பிரேசிலில் கொரோனா நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி

பிரேசிலும் தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

பிரேசிலியா:

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஆஸ்பத்திரிகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இந்தநிலையில் அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெர்ஜிபே மாகாணத்தின் அரகாஜு நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை இந்த ஆஸ்பத்திரியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்து விட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது.இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.

ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் நோயாளிகளை அவசர அவசரமாக வெளியேறினர்.‌இதனிடையே இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி கொரோனா நோயாளிகள் 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »