Press "Enter" to skip to content

உலங்கூர்தியில் வந்து காவல்துறையில் சரணடைந்த வாலிபர்

தாக்குதல் வழக்கில் தலைமறைவான வாலிபர் உலங்கூர்தியில் வந்து காவல்துறையில் சரணடைந்த சம்பவம் நியூசிலாந்தில் நிகழ்ந்துள்ளது

வெலிங்டன்:

நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒடாகோ பிராந்தியத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் பிரையன்ட். 32 வயதான இவர் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருக்கும் நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அவர்களை கத்தியால் குத்தியதாக தெரிகிறது.இது தொடர்பான புகாரின் பேரில் ஜேம்ஸ் பிரையன்ட் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் காவல் துறையினர் அவரை கைது செய்வதற்கு அவர் தப்பி ஓடி தலைமறைவானார்.அவர் கடந்த 5 வாரங்களாக வயனகருவா என்ற நகரில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்தார்.

இதனிடையே ஜேம்ஸ் பிரையன்ட் ஆபத்தான நபர் எனவும் பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உள்ளூர் ஊடகங்களில் அவரை தேடப்படும் குற்றவாளி என கூறி செய்திகள் வெளிவந்தன. இதனால் ஜேம்ஸ் பிரையன்ட் காவல்துறையில் சரணடைய முடிவு செய்தார்.‌ வக்கீல் ஒருவரின் உதவியோடு அமைதியான முறையில் காவல்துறையில் சரணடைவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

இதையடுத்து தான் தங்கியிருந்த வனப்பகுதியிலிருந்து காவல் துறை நிலையம் செல்வதற்கு தனது சொந்த செலவில் உலங்கூர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். அந்த உலங்கூர்தியில் அவர் காவல் துறை நிலையம் வந்து இறங்கினார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தலைமறைவாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘அந்த அனுபவம் நன்றாக இருந்தது. தினமும் யோகா செய்தேன்’’ என கூறினார். பின்னர் அவர் காவல் துறை நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »