Press "Enter" to skip to content

மாநிலங்களிடம் 1.82 கோடி தடுப்பூசி கையிருப்பு – அடுத்த 3 நாளில் 5 லட்சம் ‘டோஸ்’ வினியோகம்

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 22.77 கோடி தடுப்பூசி டோஸ்களை வினியோகம் செய்துள்ளது.

புதுடெல்லி:

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதின்கீழ் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 22.77 கோடி தடுப்பூசி டோஸ்களை வினியோகம் செய்துள்ளது. இவற்றில் 20 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரத்து 397 டோஸ்கள் (வீணானவை உள்பட) பயன்படுத்தப்பட்டு விட்டன.

இந்த நிலையில் மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 82 லட்சத்து 21 ஆயிரத்து 403 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. அடுத்த 3 நாளில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 180 டோஸ் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வினியோகிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »