Press "Enter" to skip to content

மும்பையில் கல்லெண்ணெய் விலை ரூ.100-ஐ தாண்டியது

மும்பையில் கடந்த 1-ந் தேதி கல்லெண்ணெய் விலை ரூ.96.83 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கல்லெண்ணெய் விலை அதிகரித்து கொண்டே வந்தது.

மும்பை:

மும்பையில் கடந்த 1-ந் தேதி கல்லெண்ணெய் விலை ரூ.96.83 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கல்லெண்ணெய் விலை அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று நகரில் கல்லெண்ணெய் விலை ரூ.100-ஐ தாண்டியது. ஒரு லிட்டர் கல்லெண்ணெய் ரூ.100.19-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கல்லெண்ணெய் விலை ரூ.100-ஐ தாண்டி இருப்பது பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தவிர தானே, நவிமும்பையிலும் கல்லெண்ணெய் விலை ரூ.100-ஐ தாண்டி உள்ளது. அங்கு லிட்டர் கல்லெண்ணெய் ரூ.100.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.87.81-க்கு டீசல் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த விலை ரூ.92.17 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பை, தானே, நவிமும்பையில் டீசல் விலை ரூ.90-ஐ தாண்டி இருப்பது போக்குவரத்து தொழிலை நம்பி உள்ளவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் டீசல் விலை உயர்வு காரணமாக காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்படும் என வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர். எனவே டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் அதற் கான வரிகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »