Press "Enter" to skip to content

இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் – ஜோ பைடன் பரிந்துரை

இந்தியப்பெண்ணை அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண், சரளா வித்யா நாகலா என்பவரை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பெண் சிவில் உரிமை வக்கீல் ஆவார்.

இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.

செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையை தீர்மானிக்க துணை ஜனாதிபதி, ஓட்டு போட முடியும். எனவே 51 வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவின் நியமனம் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரளா வித்யா நாகலா, 2017 முதல் அதே கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட அட்டார்னியின் அலுவலகத்தில் குற்றப்பிரிவில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். முதலில் இவர் 2012-ல் அமெரிக்க அட்டார்னி அலுவலகத்தில் சேர்ந்து, வெறுக்கத்தக்க குற்றங்கள் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

2010-12 காலகட்டத்தில் சான்பிரான்சிஸ்கோவில் முங்கர் டோல்ஸ் அண்ட் ஓல்சனில் பணியாற்றி உள்ளார்.

இவர் 2008-09 கால கட்டத்தில் 9-வது அப்பீல் நீதிமன்றம் நீதிபதி சூசன் கிராபரின் சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »