Press "Enter" to skip to content

மத்திய பிரதேசத்தில் உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிப்பு

இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் 2-வது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது.

போபால்:

இந்தியாவில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து 10-வது நாளாக ஒரு லட்சத்துக்கு கீழே பதிவாகி வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்து 67,208 பேர் புதிதாக கொரோனா தாக்குதலுக்கு ஆளாகினர்.

நாட்டில் தினசரி பாதிப்பு விகிதம் 3.48 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 3.99 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே, எளிதில் பரவக்கூடிய டெல்டா வகை வைரசானது உருமாறி ‘டெல்டா பிளஸ்’ அல்லது ‘ஏ.ஒய் 1’ வகையை உருவாக்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவை இன்னும் கவலை தரும் விஷயமில்லை என்றது.

இந்நிலையில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப் படி மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் கோவிட்19 நோயை உண்டாக்கும் புதிய உருமாறிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வித்துறை மந்திரி விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார்.

இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். புதிய வகை பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

டெல்டா பிளஸ் என்ற உருமாறிய நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) மாநிலத்தில் மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »