Press "Enter" to skip to content

மானநஷ்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம்

சாலை அமைத்த விவகாரத்தில் நைஸ் நிறுவனம் தேவேகவுடாவிடம் ரூ.10 கோடி கேட்டு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது.

பெங்களூரு:

பெங்களூரு அருகே நைஸ் நிறுவனம் சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை அமைத்த விவகாரத்தில் நைஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த அந்த நிறுவனம் தேவேகவுடாவிடம் ரூ.10 கோடி கேட்டு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அப்போது நைஸ் நிறுவனம் மீது தேவேகவுடா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் எந்த விதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தால், தேவேகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து நீதிபதி மல்லனகவுடா உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிநீதி மன்றத்தில் தேவேகவுடா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »