Press "Enter" to skip to content

உ.பி. முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் லக்னோ மருத்துவமனையில் அனுமதி

லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங்கை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று நலம் விசாரித்தார்.

லக்னோ:

ராஜஸ்தான் மாநில முன்னாள் கவர்னரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியுமான கல்யாண் சிங் நேற்று மாலை லக்னோவின் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னதாக, அவருக்கு கடந்த 2 வாரங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நிலையில், கல்யாண் சிங் தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கல்யாண் சிங்கிற்கு ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு விகிதம் சீராக உள்ளன. இருப்பினும் அவர் முழு சுயநினைவோடு இல்லை. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »