Press "Enter" to skip to content

11 மாநிலங்களில் 3-ல் இரு பங்கினருக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி

தமிழகத்தில் 69.2 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வர நாடு போராடும் வேளையில், 11 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் கொரோனா எதிர்ப்பு சக்தியை கணக்கிடும் ‘செரோ மேலாய்வு’ நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் குறைந்தது மூன்றில் இரு பங்கு மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடி) பெற்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 79 சதவீதத்தினர் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்கிறார்கள்.

பிற மாநிலங்களில் ராஜஸ்தானில் இது 76.2, பீகாரில் 75.9, குஜராத்தில் 75.3, சத்தீஷ்காரில் 74.6, உத்தரகாண்டில் 73.1, உத்தரபிரதேசத்தில் 71, ஆந்திராவில் 70.2, கர்நாடகத்தில் 69.8, தமிழகத்தில் 69.2, ஒடிசாவில் 68.1 சதவீதமாக உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »