Press "Enter" to skip to content

பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13-ம் நிலை வீராங்கனையை எந்தவித கடினமின்றி 2-0 என வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பிவி சிந்து

பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற சுற்று ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரநிலை 6) டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்-ஐ (தரநிலை 13) எதிர்கொண்டார்.

இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12-ம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4-ம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »