Press "Enter" to skip to content

எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி சேவையில் மாற்றம்- தெற்குதொடர்வண்டித் துறை அறிவிப்பு

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) பினாகினி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி வருகிற 21-ந்தேதி சென்னை சென்டிரல்-கூடுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை:

தெற்குதொடர்வண்டித் துறை மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* காரைக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02606) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி செங்கல்பட்டு-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-மதுரை (02635) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி எழும்பூர்-செங்கல்பட்டு இடையிலும், மதுரை-எழும்பூர் (02636) எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி விழுப்புரம்-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-காரைக்குடி (02605) சிறப்பு தொடர் வண்டி எழும்பூர்-விழுப்புரம் இடையிலும் வருகிற 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) பினாகினி எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி வருகிற 21-ந்தேதி சென்னை சென்டிரல்-கூடுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்டிரல்- மங்களூரு (06627) எக்ஸ்பிரஸ் தொடர் வண்டி வருகிற 21-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் சென்டிரல்- ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* விஜயவாடா-சென்டிரல் (02711) எஸ்க்பிரஸ் தொடர் வண்டி கூடூர்-சென்னை சென்டிரல் இடையே வருகிற 21-ந்தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »