Press "Enter" to skip to content

ராசிபுரம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்

கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்டார் என்றும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சுவேதா (வயது 19) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சுவேதா ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில் ஓராண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.

கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அவர் நீட் தேர்வு எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே சுவேதா சோகமாக காணப்பட்டார். வீட்டில் உள்ளவர்கள் சுவேதாவை சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சுவேதாவின் தோழியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுவேதா அங்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இரவு வரை சுவேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து சுவேதாவின் பெற்றோர் நேற்று இரவு நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »