Press "Enter" to skip to content

குமரியில் 1,750 ஏக்கர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின- விவசாயிகள் கவலை

குமரியில் கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா பகுதிகளிலும் 147 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டித்தீர்த்த மழை மாவட்டத்தையே புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஏராளமானோர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்னர். குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் இன்னும் முழுமையாக வடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து வருகிறது.

செங்கல்சூளைத் தொழில், உப்பளத் தொழில், மீன்பிடி தொழில், விவசாயத் தொழில், கட்டிட கட்டுமானத் தொழில், ரப்பர் பால் வெட்டும் தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 11-ந் தேதி முதல் நேற்று வரை அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 6 தாலுகா பகுதிகளிலும் 147 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் 291 வீடுகள் இடிந்து விழுந்தன.

மழையின் காரணமாக இறச்சகுளம், தாழக்குடி, நாவல்காடு, ஈசாந்திமங்கலம் மேலூர், ஈசாந்தி மங்கலம் கீழூர், திருப்பதிசாரம், தேரூர், தேரேகால்புதூர், சுசீந்திரம், மருங்கூர், நல்லூர், குலசேகரபுரம், வடக்கு தாமரைக்குளம், இரவிபுதூர், லீபுரம், கொட்டாரம் கிழக்கு, புத்தேரி, கணியாகுளம், வடசேரி நீண்டகரை ஏ கிராமம், பாகோடு, பத்மநாபபுரம், கல்குளம், வேளிமலை, சடையமங்கலம், வில்லுக்குறி, வெள்ளிமலை, தெரிசனங்கோப்பு, திடல், வீரமார்த்தாண்டன்புதூர், அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,750 ஏக்கர் நெல், வாழை, ரப்பர், உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகளால் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »