Press "Enter" to skip to content

பாபாசாகேப் புரந்தரே மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது என்று பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

வரலாற்று ஆசிரியரும், பத்ம விபூஷண் விருது பெற்ற பிரபல எழுத்தாளருமான பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே உடல் நலக்குறைவால் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் பதிவில் கூறுகையில், “நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்காக அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுக்கூறப்படும்.

ஷிவ்ஷாஹிர் பாபாசாஹேப் புரந்தரே புத்திசாலியாகவும், இந்திய வரலாற்றில் வளமான அறிவுடனும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருடன் மிக நெருக்கமாக பழகிய பெருமை எனக்கு கிடைத்தது. சில மாதங்களுக்கு முன், அவரது நூற்றாண்டு விழாவில் உரையாற்றினேன்.

ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரே தனது விரிவான பணிகள் மூலம் வாழ்வார். இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி. ” என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »