Press "Enter" to skip to content

19-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் அடைமழை (கனமழை) பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி அடைமழை (கனமழை) பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் அடைமழை (கனமழை) பெய்தது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடைமழை (கனமழை) சற்று குறைந்த நிலையில், குமரி மாவட்டத்தில் அடைமழை (கனமழை) பெய்தது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வருகிற 19-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிவாரண அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »