Press "Enter" to skip to content

தடுப்பூசி போட்டு, முககவசம் அணிந்தால் ‘ஒமைக்ரான்’ வராமல் தடுக்க முடியும்- ராதாகிருஷ்ணன்

‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை:

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

‘’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ‘ஒமைக்ரான்’ வராமல் இருக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். தவறாமல் முக கவசம் அணிய வேண்டும். இதை தவறாமல் கடை பிடித்தால் நமக்கு பாதிப்பு வராது.

எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 3-வது அலை வந்தாலும் வராவிட்டாலும் மருத்துவ கட்டமைப்பு நம்மிடம் வலுவாக உள்ளது. எனவே சுயகட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவைப்படாது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் எதுவும் இல்லை. ஆனாலும் இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம்.

டெல்டா வகை கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் ஆனால் ‘ஒமைக்ரான்’ வைரசை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமின்றி மரபணு பரிசோதனையும் செய்து தான் ஒருமுடிவுக்கு வர முடிகிறது.

அதனால்தான் அதுவரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களை ஆஸ்பத்திரியில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »