Press "Enter" to skip to content

ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும்

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன்களை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

சென்னை:

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய  தொகுப்பினை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதன்படி, பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனவரி 3ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன்களை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தகுதி வாய்ந்தவர்களுக்கு தரமான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »