Press "Enter" to skip to content

தினமும் 14 லட்சம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவர் – கொரோனா தடுப்புக் குழு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடாமல் மக்கள் வீடுகளில் கொண்டாடுவது நல்லது என்று கொரோனா தடுப்புக் குழு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் வேகமாக ஓமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி வருகிறது.11 மாநிலங்களில் இதுவரை 101 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கொரோனா தடுப்பு பிரிவு தலைவர் வி.கே. பால் கூறியதாவது:

பிரிட்டன், பிரான்ஸில் அதிவேகத்தில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி வருகிறது. ஐரோப்பாவில் 80 சதவிதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஐரோப்பா உள்ளது. இதே வேகத்தில் இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவினால் தினமும் 13 முதல் 14 லட்சம் பேர்  வரை தொற்றால் பாதிக்கப்படுவர்.

மத்திய அரசு இப்போதே கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது நல்லது.  வெளியூர் பயணம், கூட்டமான இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடாமல் சிறிய அளவில் வீடுகளில் கொண்டாடுவது நல்லது. டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் அதிவேகமானது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வி.கே. பால் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »