Press "Enter" to skip to content

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான நபர்களுக்கு வரும் அனைத்து கைபேசி அழைப்புகளும் போலீசாரால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. சார்பில் இது தொடர்பாக கவர்னரை சந்தித்தும் மனுக்கள் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீதும் பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டு இருந்தன. ஆவின் நிர்வாகத்தில் அவர் பல வழிகளில் முறைகேடுகள் செய்து இருப்பதாக தமிழக அரசு ஏற்கனவே குற்றம் சுமத்தி இருந்தது.

அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது அ.தி.மு.க. ஆட்சியின்போது வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 கோடியே 10 லட்சம் அளவுக்கு மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன.

இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஜயநல்லதம்பி அளித்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் முன் பிணை வழங்கக்கோரி சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிநீதி மன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு முன் பிணை வழங்க மறுத்து விட்டது.

இது தொடர்பான உத்தரவை நீதிபதி நிர்மல் குமார் பிறப்பித்தார். காவல் துறை தரப்பில் ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளது என தெரிவிக்கப்பட் டது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு முன் பிணை மறுக்கப்பட்டது.

உயர்நீதிநீதி மன்றம்டின் முன் பிணை மறுக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் ராஜேந்திர பாலாஜி திடீரென தலைமறைவானார். விருதுநகரில் நேற்று காலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் அங்கிருந்து காரில் உடனடியாக புறப்பட்டு சென்று விட்டார். அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இதையடுத்து ரூ.3 கோடி மோசடி வழக்கில் அவரை கைது செய்ய தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

விருதுநகர் மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் துறையினர் ராஜேந்திர பாலாஜியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் கணேஷ்தாஸ், பாலமுருகன் ஆகியோரது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினரும் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்தபோது 5 முதல் 6 கைபேசிகள் வரை பயன்படுத்தி இருக்கிறார். தற்போது கடைசியாக 2 கைபேசிகள் மட்டுமே அவரது பயன்பாட்டில் இருந்துள்ளன. காவல் துறை விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த கைபேசிகள் அனைத்தையும் அவர் சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார். இதனால் ராஜேந்திர பாலாஜி இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் சற்று பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள ராஜேந்திர பாலாஜியின் அரசியல் நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதுபோன்ற நபர்கள் சுமார் 50 பேரை கண்டறிந்து அவர்களின் கைபேசி எண்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான நபர்களுக்கு வரும் அனைத்து கைபேசி அழைப்புகளும் போலீசாரால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ராஜேந்திர பாலாஜி வெளியில் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு அனைத்து சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. சாலைமார்க்கமாக அவர் எங்கு சென்றாலும் கைது செய்யும் அளவுக்கு காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எனவே விரைவில் அவரை கைது செய்து விடுவோம்” என்று தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜி சென்னைக்கு தப்பி வந்து இருக்கலாம் என்கிற தகவல் இன்று காலை வெளியானது. அதே நேரத்தில் அவர் பெங்களூருக்கு தப்பி இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் இதனை காவல் துறையினர் மறுத்தனர்.

ராஜேந்திர பாலாஜி வெளியில் எங்கும் சென்றிருக்க வாய்ப்பு இல்லை. உயர்நீதிநீதி மன்றத்தில் முன்பிணை மனு தள்ளுபடியான உடனேயே அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. இதனை அறிந்த பிறகே அவர் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். எனவே அவர் வெளியிடங்களுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்றனர்.

ராஜேந்திர பாலாஜி அவருக்கு நெருக்கமான அரசியல் பிரமுகர்களின் வீடுகளிலோ அல்லது ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணை வீடுகளிலோ தஞ்சம் புகுந்து இருக்கலாம் என்று காவல் துறையினர் கருதுகிறார்கள்.

இதையடுத்து அதுபோன்ற சந்தேகத்துக்கு இடமான இடங்களிலும் காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம் இன்று மாலைக்குள் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இதுவரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோசடி வழக்கில் காவல் துறை தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க.வினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »