Press "Enter" to skip to content

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி- அமைச்சர் மூர்த்தி

கடந்த கால ஆட்சியை போல் இல்லாமல் முறையாக ஜல்லிக்கட்டை நடத்துவோம் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரை:

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தாண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

கலப்பின மாடுகள் கொண்டு வருவோருக்கு டோக்கன் கொடுக்க மாட்டோம். தி.மு.க. ஆட்சியில் தான் ஜல்லிகட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்றுவதற்காகவே நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால ஆட்சியை போல் இல்லாமல் முறையாக ஜல்லிக்கட்டை நடத்துவோம். நாட்டு மாடு இனங்களை அபிவிருத்தி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »