Press "Enter" to skip to content

புதிய வேலை வாய்ப்புகள் வரப்போகின்றன – பிரதமர் மோடி உரை

உத்தரபிரதேசத்தில் அமையவுள்ள கங்கை விரைவுச்சாலையால் அப்பகுதி மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் வர இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஷாஜகான்பூர்:

உத்தரப்பிரதேசத்தில் மீரட் முதல் பிரயாக்ராஜ் வரை ரூ.36,200 கோடி செலவில் கங்கை விரைவு பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது:-

சுமார் ரூ.36,000 கோடி செலவில் 600 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த விரைவுச்சாலை அமையவுள்ளது. இந்த விரைவுச்சாலையின் மூலம் இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகும். இதன்மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் தேடி வரும். 

அடுத்த தலைமுறைக்கு தேவையான நவீன கட்டமைப்பு கொண்ட மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் பெறப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

நம்மிடம் இருக்கும் வளங்களை எப்படி சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதற்கு உ.பி. ஒரு உதாரணமாக இருக்கும். உ.பி. மக்களின் பணம் உ.பி.யின் வளர்ச்சிக்கே செலவிடப்படுகிறது. இதனால் இந்த பணம் எங்கேயும் போகாமல் உங்களிடமே திரும்பி வந்துவிடும்.

இதற்கு முன் இருந்த அரசின் மோசமான சட்டம் ஒழுங்கால் மக்கள் பலர் உத்தர பிரதேச்தை விட்டு வெளியேறினர். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. கடந்த 4.5 வருடங்களில் புல்டோசரைக் கொண்டு மாபியாக்களின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அரசு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மாஃபியாக்களை அழித்து, உத்தர பிரதேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »