Press "Enter" to skip to content

கோத்ரா தொடர் வண்டி எரிப்பு சம்பவத்தை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி காலமானார்

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜிடி நானாவதி இன்று மதியம் 1.15 மணிக்கு மாரடைப்பால் குஜராத்தில் உயிரிழந்தார்.

புதுடெல்லி:

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், கோத்ரா தொடர் வண்டிஎரிப்பு சம்பவம் ஆகிய வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நானாவதி காலமானார். 

முன்னாள் நீதிபதி ஜிடி நானாவதி 1958-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி மும்பை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது நீதித்துறை பயணத்தை தொடங்கினார். பின் 1979-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன்பின், 1994-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். பின் 1995-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2000-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி ஓய்வு பெற்றார்.

1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த விசாரணை கமிஷனில் நீதிபதி ஜிடி நானாவதி இடம்பெற்றிருந்தார். பின்னர் 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நடைபெற்ற கோத்ரா தொடர் வண்டி எரிப்பு சம்பவத்தை விசாரிக்க இவரது தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »