Press "Enter" to skip to content

கர்நாடகாவில் மேலும் 6 பேருக்கு தொற்று- இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 123 ஆனது

கேரளாவில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இந்தியாவிலும் பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் மருத்துவர் உள்பட 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இன்று மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். இதன்மூலம் மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கேரளாவில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »