Press "Enter" to skip to content

நாளை முதல் மருத்துவ படிப்பு விண்ணப்பம் விநியோகம்

எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிமணியன் தெரிவித்தார்.

சென்னை:

எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து ஒவ்வொரு மாநிலமும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை துரிதப்படுத்தி உள்ளன. 

இந்நிலையில், தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ் படிப்புக்கு 6958 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 1925 இடங்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »