Press "Enter" to skip to content

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சா.மு.நாசர்

தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார்.

ஆவடி:

ஆவடி அருகே உள்ள நடுக்குதகை ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தொடங்கிய போது தங்களது கைகளை மீறி போய் விட்டதாக கடந்த ஆட்சியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் கைவிரித்து விட்டனர்.

ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அதனை தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் திறமையாக கையாண்டு மக்களை காப்பாற்றினார். அதே போல் தற்போது ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), 3-வது அலை வந்தாலும் தமிழக அரசும் முதல்வரும் அதனை திறம்பட எதிர்கொள்வார்கள்.

வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் பல புகார்கள் அடுத்தடுத்து வந்துள்ளது. பொறுத்து இருந்து பாருங்கள்.

தற்போதைய ஆட்சியில் எதிர்கட்சியினர் மட்டுமல்ல ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். ராஜேந்திர பாலாஜி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்…கடவுள், இந்த உலகத்துல கஷ்டப்படணும்னு படைச்சிருக்கார் – 3 கடிதம் எழுதி வைத்து மாணவி தற்கொலை

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »