Press "Enter" to skip to content

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயல்- பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

சூறாவளி புயல் காரணமாக பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது.

சூறாவளி புயல் கரைகடந்தபோது  அதிகபட்சமாக 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பலத்த மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

சியார்கோ, சூரிகாவோ ஆகிய பகுதிகளில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். சூறாவளி புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. மேலும் பலரைக் காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. 

மீட்பு பணியில் ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, கடலோர காவல் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »