Press "Enter" to skip to content

கடந்த ஆண்டு 601 பேரின் உயிரை காப்பாற்றியதொடர்வண்டித் துறை காவல் துறையினர்

தொடர் வண்டி பயணிகளுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்புடைய குற்றவாளிகளைதொடர்வண்டித் துறை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுடெல்லி:

ரெயில்வே காவல் துறையினர், கடந்த 2021ம் ஆண்டில் 601 உயிர்களை காப்பாற்றி உள்ளனர்.  அவர்கள், 4 ஆண்டுகளில் 1,650 பேரின் உயிரை இதுவரை காப்பாற்றியுள்ளனர் எனதொடர்வண்டித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாகதொடர்வண்டித் துறை அமைச்சகம் சார்பில் வெளியான அறிக்கையில் கூறியதாவது:

புகார் தெரிவிக்கவும், தேவைக்காகவும்தொடர்வண்டித் துறை உதவி எண் 139-க்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. 

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக பணியில் இருந்த 26 ஆர்பிஎப் காவல் துறையினர் உயிரிழந்துள்ளனர்.

கடத்தல்காரர்களிடம் இருந்து 54 பெண்கள், 94 சிறுமிகள், 81 ஆண்கள் மற்றும் 401 சிறுவர்கள் என மொத்தம் 630 பேரைதொடர்வண்டித் துறை காவல் துறையினர் காப்பாற்றி உள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டில் போதை பொருள் கடத்தல்காரர்கள் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.15.7 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »