Press "Enter" to skip to content

விவசாயிகள் ஒரு வருடம் காத்திருந்தார்களே, உங்களால் 15 நிமிடம் காக்கமுடியவில்லையா? – சித்து ஆவேசம்

பஞ்சாப்பில் பிரதமர் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்று முன்தினம் பஞ்சாப் சென்றார். அப்போது வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் பிரதமரின் வாகனம் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது.

இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த சம்பவத்திற்கு காரணம் என பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் காங்கிரசின் முக்கிய தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து பிரதமரை நோக்கி சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்கள் சித்துவிடம் கேள்வி கேட்டனர். அப்போது பேசிய சித்து, பிரதமர் மோடி அவர்களே, உங்களால் 15 நிமிடம் காத்திருக்க முடியவில்லையா? வேளாண் சட்டத்தை விலக்கக் கோரி விவசாயிகள் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தினார்களே, அப்போது எங்கு சென்றீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறீர்கள் என ஆவேசமாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்…மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »