Press "Enter" to skip to content

ஒமைக்ரான் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சாதாரணமானது அல்ல – உலக சுகாதார அமைப்பு தகவல்

ஒமைக்ரான் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அதை லேசானது என வகைப்படுத்த முடியாது என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெனிவா:

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை  அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்  மருத்துவ மேலாண்மைக்கான முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ், பேசியதாவது :

ஓமிக்ரான் பாதிப்பு குறைவானதாக  இருக்கலாம், ஆனால் லேசானதாக இல்லை.  நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைந்தது என ஆரம்பகால ஆய்வுகள் தெரிவித்தன. எனினும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் முதியவர்களிடம் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாக இருக்கிறது.  

ஏனெனில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட பெரும்பாலான சோதனை முடிவுகள் இளம் வயதினரிடம் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.  டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரானின் தீவிரத்தன்மை குறைவானதாக தோன்றினாலும்,  தடுப்பூசி போடப்பட்டவர்களையும் இது பாதித்துள்ளது. இதனால் ஒமைக்ரான் லேசானது என வகைப்படுத்த முடியாது.

கொரோனா, டெல்டா வைகை நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)கள் ஏற்படுத்திய  மாறுபாடுகளைப் போலவே ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிக்சை பெறுவோரும் உயிரிக்கின்றனர். தற்போதைய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக மக்கள்தொகையில் 70 சதவீதம் பேருக்கு ஜூலை மாதத்திற்குள் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் . இதன் மூலம் தொற்றுநோயின் கடுமையான கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அது உதவும் என கருதப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தற்போது வரை உலக அளவில் 36 நாடுகளில் 10 சதவீதம் கூட முழுமையான தடுப்பூசி போடப்படவில்லை. உலகெங்கிலும் கொரோனா தொற்றுக்கு கடுமையான பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவ மேலாண்மைக்கான ஆலோசகர்  புரூஸ் அய்ல்வர்ட் தெரிவித்துள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »