Press "Enter" to skip to content

தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் – பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் உயிரிழப்பு

பிரான்சில் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது.

பாரிஸ்:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால், தடுப்பூசி செலுத்தாமல் அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கு பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் தலைவருமான ஜோஸ் எவ்ரார்டு (76),  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளார். இவர் வடக்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள பாஸ் டி கெலைஸ் பகுதியைச் சேர்ந்தவர். 

இவரது மரணம் தடுப்பூசியின் அவசியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற கருத்து இணையத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.15 கோடியைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »